விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடர்களில் ஒன்று ராஜா ராணி.இந்த தொடரின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஹீரோயினாக நடித்த ஆல்யா மானசா.குறுகிய காலத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் இதயங்களில் இடம்பிடித்துவிட்டார்.

ராஜா ராணி தொடரை அடுத்து கல்யாணம்,குழந்தை என்று பிஸியாக இருந்தார் ஆல்யா.ஒரு சிறிய இடைவேளைக்கு பின் ராஜா ராணி 2 தொடரின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார் ஆல்யா.இந்த தொடரில் திருமணம் சீரியல் புகழ் சித்து ஹீரோவாக நடித்துள்ளார்.இந்த தொடர் தற்போது ஒளிபரப்பாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நிஹாரிகா நடித்து வருகிறார்.இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார்.இவரது இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் சில மாதங்களுக்கு முன் ஹேக் செய்யப்பட்டது பின் புதிய அக்கவுண்ட் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.

ராஜா ராணி தொடரை தவிர வேலைக்காரன் தொடரிலும் நடித்து அசத்தி வருகிறார் நிஹாரிகா.தற்போது தனது கணவருடன் எடுத்துக்கொண்ட முத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள நிஹாரிகா இந்த புகைப்படத்தை பகிர்ந்த சில நாட்களில் தான் என்னுடைய அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.