ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக வெளியான காஞ்சனா திரைப்படத்தின் மூன்றாவது பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. அதைத்தொடர்ந்து அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி நடிப்பில் காஞ்சனா முதல் பாகத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற டைட்டிலில் ரீமேக் செய்தார் ராகவா லாரன்ஸ். இத்திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

இவர் அடுத்ததாக பொல்லாதவன் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களை தயாரித்த ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் கதிரேசன் இயக்குனராக அவதாரம் எடுக்கிறார்.ஜி.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்திற்கு ருத்ரன் என்று படக்குழுவினர் பெயரிட்டிருந்தனர்.

ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்,நாசர்,பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.K.P.திருமாறன் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதுகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் R.D. ராஜசேகர் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.பூஜையில் படத்தின் முக்கிய நடிகர்,நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இந்த படம் குறித்த முக்கிய அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.