பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடித்து திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் சந்திரமுகி. சிவாஜி ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு வித்யா சாகர் இசை அமைத்திருந்தார். சூப்பர்ஸ்டார் ரஜினியின் கம்பேக் என்றே கூறலாம். சந்திரமுகி வெளியான நேரத்தில் இந்த படத்திற்கு அஞ்சாதோர் யாரும் இருக்கும் முடியாது. ஹாரர் ஜானரில் சூப்பர்ஸ்டார் நடித்துள்ளார் என்பது படத்திற்கு பக்கபலமாக இருந்தது. 

2005-ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மெகா ஹிட்டானது. வசூலிலும் சாதனை படைத்தது. வடிவேலுவின் காமெடியும், ரஜினியின் வேட்டையன் கேரக்டரும் பாடல்களும் இந்தப் படத்தின் ஹைலைட்டான விஷயங்களில் ஒன்றாக இருந்தன. இதனால் குடும்பத்தினர் கொண்டாடும் படமாக இது இருந்தது. இப்போதும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள வடிவேலு காமெடி பேசப்படுவதாக இருக்கிறது. 800 நாட்களுக்கு மேல் ஓடியது சாதனை படைத்த முதல் படம். இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது.

இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இந்த படத்தின் ஹீரோயின் குறித்த வதந்தி அடிக்கடி வருவதை பார்க்க முடிகிறது. தற்போது இதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓர் பதிவை செய்துள்ளார். 

அதில், சந்திரமுகி 2 படத்தின் ஹீரோயினாக ஜோதிகா மேம், சிம்ரன் மேம் மற்றும் கியரா அத்வானி இவர்கள் நடிக்கவுள்ளதாக இணையத்தில் தவறான செய்தி வருகிறது. இதை யாரும் நம்ப வேண்டாம். ஸ்கிரிப்ட் பணிகள் போய் கொண்டிருக்கிறது. கொரோனா பிரச்னைகள் முடிந்தவுடன் தயாரிப்பு நிறுவனம் இது குறித்து தகவல் தெரிவிக்கும் என்று கூறியுள்ளார் லாரன்ஸ். 

காஞ்சனா படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளார். லக்‌ஷ்மி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இந்த படத்தில் அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.