டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஒரு நாயகனாக தன்னை உருவாக்கிக்கொண்டு பின்னர் முனி,காஞ்சனா படங்களின் மூலம் தன்னை ஒரு இயக்குனராகவும் நிரூபித்தவர் ராகவா லாரன்ஸ்.இவர் இயக்கி நடித்த காஞ்சனா 3 படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஹிந்தியில் அக்ஷய் குமார் நடித்து வரும் காஞ்சனா படத்தின் ரீமேக்கை இயக்கிஇருக்கிறார்இந்த படம் விரைவில் நேரடியாக OTT-யில் வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து இவர் சந்திரமுகி 2,மற்றும் பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பாக எஸ்.கதிரேசன் தயாரிக்கும் படத்திலும் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

சமூக அக்கறை அதிகம் உள்ள நடிகர்களில் ஒருவர் லாரன்ஸ் தன்னால் முடிந்தளவு பலருக்கும் பல உதவிகளை அவர் அவ்வப்போது செய்துவருகிறார்.அவர் நடத்திவரும் டிரஸ்ட்டில் இருக்கும் 18 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யபட்டது.

இந்த 18 குழந்தைகளும் குணமடைந்து திரும்பிவிட்டனர் என்று ராகவா லாரன்ஸ் சில நாட்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.தனது சமூகசேவை குழந்தைகளை கைப்பற்றியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.குழந்தைகள் குணமடைந்த்து வீடு திரும்ப உதவிய அரசு அதிகாரிகளுக்கும், மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்து அவர் பதிவிட்டிருந்தார்.

தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு முக்கியமான பதிவிட்டுள்ளார் லாரன்ஸ்.அதில் அவர் கூறியுள்ளதாவது என் டிரஸ்ட்டில் உள்ள 18 குழந்தைகள் கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர் என்று நீங்கள் அனைவரும் அறிந்ததே.அவர்கள் குணமடைந்ததற்கான முக்கிய காரணம் என்று டாக்டர்கள் கூறியது அவர்களது யோகாவும்,மூச்சுவிடும் பயிற்சியும் தான் அதனால் இதனை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.