2018 ஆகஸ்ட் மாதம் வெளியாகி இளைஞர்களின் மனம் கவர்ந்த படமாக இருந்த படம் பியார் பிரேமா காதல்.இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜாவின் YSR பிலிம்ஸ் மற்றும் கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருந்தனர்.

Pyaar Prema Kadhal Deleted Scene Sneak At Night

ஹரிஷ் கல்யாண் இந்த படத்தின் ஹீரோவாக நடித்திருந்தார்.ரைசா வில்சன் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.அறிமுக இயக்குனர் எலன் இந்த படத்தை இயக்கியிருந்தார்.யுவனின் இசையில் இந்த படத்தின் பாடல்கள் செம ஹிட் அடித்தன.

Pyaar Prema Kadhal Deleted Scene Sneak At Night

கமலின் விஸ்வரூபம் 2 படத்துடன் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கிட்டத்தட்ட 2 வருடங்கள் கழித்து இந்த படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் சிலவற்றை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.தற்போது யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு எப்படி வெளியே வருவது என்ற நீக்கப்பட்ட காட்சியை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.