அடல்ட் காமெடி படமாக திரைக்கு வரவிருக்கும் படம் பப்பி. நட்டு தேவ் இயக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். வருண் கமல் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

puppysongvideo

varunkamal

தரண்குமார் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இதற்கிடையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த பிரச்னையினாலே படத்திற்கு பப்ளிசிட்டி கிடைத்தது.

puppy

samyuktha

puppy

இந்நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியானது. ப்ளூ பிலிம் பார்க்கும் ஹீரோவின் அளப்பறைகளையும், காதலனால் கர்ப்பமாகும் ஹீரோன், அவர்களுடன் சேர்ந்து ட்ராவல் செய்யும் யோகி பாபு என படம் முழுக்க முழுக்க 18+ இளசுகளுக்கு ஏற்றவாறு உருவாகியுள்ளது. தற்போது இந்த படத்தின் அஞ்சி மணிக்கு பாடல் வீடியோ வெளியானது. யுவன்ஷங்கர் ராஜா மற்றும் சாஷா திருப்பதி பாடிய இந்த பாடல் வரிகளை விஜய் எழுதியுள்ளார்.