உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கண்ணே கலைமானே. சீனு ராமசாமி இயக்கிய இந்தப் படத்தை தொடர்ந்து மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே எனும் படத்தில் நடித்து வருகிறார்.

udhayanidhi

மிஸ்கின் இயக்கத்தில் சைக்கோ எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை டபுள் மீனிங் புரொடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் இயக்குனர் ராம், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

udhayanidhi aditiraohydari

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருப்பதாக இருந்தது பின்பு சில காரணத்தால் அவருக்கு பதிலாக தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார் என்பது தெரியவந்தது. சமீபத்தில் படத்தின் டீஸர் வெளியானது. இப்படம் டிசம்பர் 27-ம் தேதி வெளியாகவிருக்கிறது என்ற தகவல் தெரியவந்தது. தற்போது இந்த படத்திலிருந்து உன்ன நெனச்சு பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. சித் ஸ்ரீராம் பாடிய இந்த பாடல் வரிகளை கபிலன் எழுதியுள்ளார்.