தமிழ் சினிமா ரசிகர்களிடம் தனது வித்தியாசமான கதைத்தேர்வின் மூலம் நல்ல நடிகராக உருவெடுத்துள்ளவர் அதர்வா.8 தோட்டாக்கள் படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கும் குருதி ஆட்டம் படத்தில் அதர்வா ஹீரோவாக நடித்துள்ளார்.

Priya Bhavani Shankar Dubbing Kuruthi Aattam

ராக்போர்ட் என்டேர்டைன்மெண்ட் டி.முருகானந்தம் இந்த படத்தை தயாரித்துள்ளார்.ப்ரியா பவானி ஷங்கர் இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.ராதிகா,ராதாரவி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Priya Bhavani Shankar Dubbing Kuruthi Aattam

யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிப்போனது.இந்த படத்தின் டப்பிங் வேலைகளை தற்போது படத்தின் நாயகி ப்ரியா பவானி ஷங்கர் முடித்துள்ளார் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.