தமிழ் திரையுலகில் நடிகர், காமெடியன், பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் பிரேம்ஜி. இசை சுனாமியான பிரேம்ஜிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் நெட்டிசன்களில் இவரும் ஒருவர். 

STR நடிக்கும் மாநாடு திரைப்படத்தில் நடிக்கிறார் பிரேம்ஜி. வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். கல்யாணி ப்ரியதர்ஷன், SJ சூர்யா, பாரதிராஜா, SA சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளனர். 

இந்நிலையில் பிரேம்ஜி நடிக்கும் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியானது. இந்த அப்டேட்டை பிரேம்ஜியே வீடியோ வாயிலாக வெளியிட்டார். சுரேஷ் சங்கையா இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். ஒரு கிடாயின் கருணை மனு படத்தின் மூலம் இயக்குனராக கால்பதித்தவர் இயக்குனர் சுரேஷ் சங்கையா. சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பரத் ராம் இந்த படத்தை தயாரிக்கவிருக்கிறார். 

தற்போது படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் போய் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள அவர், கொரோனா சைனா சென்றவுடன் படத்தின் ரிலீஸ் மற்றும் பிற தகவல்களை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். வரும் புதன்கிழமை இந்த படத்தின் போஸ்டர் லுக் வெளியாகவுள்ளது. கடைசியாக ஜாம்பி மற்றும் RK நகர் படத்தில் நடித்திருந்தார் பிரேம்ஜி. இதுதவிர்த்து பார்ட்டி படத்திற்கு இசையமைக்கிறார்.