2015-ல் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிரேமம்.மலையாளம் சினிமாவின் காதல் படங்களுக்கு ஒரு புது விளக்கம் கொடுத்த படம்.என்னதான் நம்ம சேரனின் ஆட்டோகிராப் போல படம் இருந்தாலும் படத்தில் ஒரு உயிர் இருந்தது.மலையாளம் சினிமாவின் பக்கம் அதிக தமிழ் ரசிகர்களை ஈர்த்த படம்.நிவின் பாலி,சாய் பல்லவி,அனுபமா,மடோனா என்று பல பிரபலங்களை நட்சத்திரங்களாக மாற்றிய படம்.

சென்னையில் 200 நாட்களை தாண்டி ஓடிய மலையாள படம் என்று பல சாதனைகளை இந்த படம் படைத்திருந்தது.இத்தகைய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் கடந்த சில வருடங்களாக வேறு படங்கள் எதுவும் இயக்காமல் இருந்தார்,சமீபத்தில் தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டார் அல்போன்ஸ்.பாட்டு என்று இந்த படத்திற்கு பெயரிட்டிருந்தார்.

இந்த படத்தின் எடிட்டிங் மற்றும் இசையமைக்கும் வேலைகளையும் அல்போன்ஸே பார்த்துக் கொள்கிறார். இந்தப் படத்தை யுஜிஎம் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.இந்த படத்தில் ஹீரோவாக மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான fahad பாசில் நடிக்கிறார்.இந்த படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

தற்போது ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அல்போன்ஸ் பேஸ்புக் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.ரஜினியை வைத்து நீங்கள் படம் எடுக்கவேண்டும் என்று எனக்கு ஆசை என்று ரசிகர் தெரிவிக்க,ரஜினிக்காக தன்னிடம் ஒரு கதை உள்ளது என்றும் ப்ரேமம் ரிலீஸ் ஆனபின் சிலமுறை சூப்பர்ஸ்டாரை பார்க்கவும் முயற்சித்தேன் ஆனால் நடக்கவில்லை,நேரம் சரியானதும் மீண்டும் அவரை சந்தித்து மீண்டும் கதைசொல்ல முயற்சிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

premam director alphonse puthren expresses interest to direct superstar rajinikanth