பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் அடுத்த படம் சாஹோ.ஷ்ரத்தா கபூர் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார்.300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை UV என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அருண் விஜய்,ஜாக்கி Shroff உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் இசையமைப்பாளராக ராட்சசன்,விஸ்வரூபம் 2 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ஜிப்ரான் இந்த படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார்.

இந்த படம் முதலில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவிருந்தது பின்னர் சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 30அன்று தள்ளிப்போனது.தற்போது இது பிரபாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.எங்களின் சாஹோ படத்திற்காக நிறைய தயாரிப்பாளர்கள்,இயக்குனர்கள் அவர்களது படங்களை தள்ளிப்போட்டுள்ளனர் அவரக்ளுக்கு சாஹோ படக்குழுவினர் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.