தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் அந்தகன். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும்  நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராகவும் விளங்கும் தியாகராஜன் அவர்கள் அந்தகன் திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.

அந்தகன் திரைப்படத்தில் பிரசாந்த் உடன் இணைந்து சிம்ரன், சமுத்திரக்கனி, கே.எஸ்.ரவிக்குமார், நவரச நாயகன் கார்த்திக், ஊர்வசி, ப்ரியாஆனந்த், யோகி பாபு, மனோபாலா, மற்றும் வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். முன்னதாக பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக தயாராகியுள்ள அந்தகன் படத்திற்கு ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு அந்தகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று தற்போது இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், முன்னணி தயாரிப்பாளரான கலைப்புலி.எஸ்.தாணு அவர்கள் தனது V கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் வெளியிட விரைவில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள அந்தகன் திரைப்படத்தின் முதல் பாடலாக என் காதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், தற்போது அந்தகன் திரைப்படத்திலிருந்து 2-வது பாடலாக யோசிச்சி யோசிச்சி பாடல் சற்று முன் வெளியானது. கலக்கலான அந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.