நடிகர் பிரசன்னா சில தினங்களுக்கு முன் ஒரு ட்வீட் செய்திருந்தார்.ஊரடங்கு நேரத்தில் தனக்கு அதிக மின்கட்டணம் வந்துள்ளதாகவும் அதுபோல் உங்கள் யாருக்காவது வந்திருக்கிறதா என்று பிரசன்னா ட்வீட் செய்திருந்தார்.

Prasanna clarifies TNEB why he didnt pay EB bill

இதனை தொடர்ந்து தமிழக மின்சாரத்துறை எப்படி மின்கணக்குகள் எடுக்கப்படுகிறது என்ற அறிக்கையை வெளியிட்டது.மேலும் பிரசன்னா மார்ச் மாதத்திற்கான கட்டணத்தை செலுத்தாததால் அவருக்கு பில் கூடுதலாக வந்துள்ளது என்றும் விளக்கமளித்தனர்.

Prasanna clarifies TNEB why he didnt pay EB bill

தற்போது இதற்கு பிரசன்னா பதிலளித்துள்ளார் , அவர் தெரிவித்துள்ளதாவது எப்போதும் ரீடிங் எடுத்து 10 நாட்களிலியேயே கட்டணத்தை செலுத்திவிடுவேன்.மார்ச் மாதம் ரீடிங் எடுக்காததால் இந்த குழப்பம் வந்துள்ளது.இப்போது மொத்த தொகையையும் கட்டிவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.மேலும் இந்த ட்வீட் அரசையோ.மின்வாரியத்தையோ குறைசொல்லும் நோக்கில் பதிவிடப்படவில்லை இதனால் மக்கள் யாருக்காவது உதவியாக இருக்கும் என்ற நோக்கத்தில் பதிவிடப்பட்ட ட்வீட் தான் அது.இதனால் மின்வாரிய ஊழியர்கள், அதிகாரிகளின் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.