கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வெளியில் வரவேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். இதற்கு ஆதரவாக பல பிரபலங்கள் கருத்து தெரிவித்தும், விழிப்புணர்வு வீடியோக்களும் வெளியிட்டும் வருகின்றனர். 

Prakash Raj

அந்த வகையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது பிறந்தநாளான இன்று, எனது தோட்டத்தில் வேலை செய்யும் 11 பேர்களுக்கு தங்க இடம் ஏற்படுத்தி கொடுத்துள்ளேன். அவர்கள் சென்னை, பாண்டிச்சேரி, கம்பம் பகுதிகளை சேர்ந்தவர்கள். அவர்களின் குடும்பத்திடம் பேசி, அவர்களுக்கு பணமும் அனுப்பி வைத்துள்ளேன். அவர்களது பாதுகாப்பையும் உறுதிபடுத்தியுள்ளேன். விரைவில் லாக் டவுன் காலத்தை எப்படி செலவிடுகிறோம் என கூறுவேன். இது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல. நம்முடையதும் கூட. முடிந்தால் ஒரு குடும்பத்தின் பொறுப்பையாவது ஏற்று கொள்ளுங்கள் என கேட்டு கொள்கிறேன். மனிதம் போற்றுவோம் என பதிவு செய்திருக்கிறார். 

PrakashRajTweet

PrakashRajTweet

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடிக்கவிருக்கிறார் பிரகாஷ்ராஜ். கடைசியாக தனுஷ் நடித்த அசுரன் படத்தில் நடித்திருந்தார்.