கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி குறிப்பிடப்படும் இயக்குனராக கவனத்தை ஈர்த்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தற்போது நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.கோமாளி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக லவ் டுடே திரைப்படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் 22வது திரைப்படமாக தயாராகியுள்ள லவ் டுடே திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து இவானா கதாநாயகியாக நடிக்க, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்யும் லவ் டுடே படத்திற்கு பிரதீப்.E. ராகவ் படத்தொகுப்பு செய் ய யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முன்னதாக லவ் டுடே திரைப்படத்தில் இருந்து முதல் பாடலாக யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து பாடி வெளிவந்த சாச்சிட்டாளே பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடரந்து லவ் டுடே திரைப்படத்தின் 2வது பாடலாக என்னை விட்டு பாடல் தற்போது வெளியானது. பிரபல பாடகர் சிட் ஸ்ரீராம் பாடியுள்ள மனதை மயக்கும் மெலடி பாடலாக வெளிவந்த என்னை விட்டு பாடலை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் எழுதியுள்ளார். லவ் டுடே படத்தின் எமோஷ்னலான என்னை விட்டு பாடல் இதோ…