சாஹோ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் படம் பிரபாஸ் 20.இந்த படத்தை ராதாகிருஷ்ண குமார் இயக்குகிறார்.வம்சி கிருஷ்ணா ரெட்டி இந்த படத்தை தயாரிக்கிறார்.அமித் திரிவேதி இந்த படத்திற்கு இசையமைத்துவருகிறார்.

Prabhas 20 Update on Jan 17 Pooja Hegde

பூஜா ஹெக்டே இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.1970-ல் நடைபெறும் ரொமான்டிக் கதையாக இது இருக்கும் என்று தெரிகிறது.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Prabhas 20 Update on Jan 17 Pooja Hegde

தற்போது இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று நாளை வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த அறிவிப்பை படத்தின் நாயகன் பிரபாஸ் வெளியிடுவார் என்பதும் தெரியவந்துள்ளது.இந்த அறிவிப்பை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Prabhas 20 Update on Jan 17 Pooja Hegde