ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ.தொடர்ந்து தெறி,மெர்சல் என்று வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர் அட்லீ.தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தை இயக்கியுள்ளார்.

Popular Hollywood Star Bill Duke on Director Atlee

இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.இதனை முன்னிட்டு இந்த படத்தின் ட்ரைலர் நாளை வெளியாகவுள்ளது.தற்போது அட்லீ குறித்து பிரபல ஹாலிவுட் பிரபலமான பில் டியூக் ட்வீட் செய்துள்ளார்.நாம் இருவரும் இணைந்து படம் எடுக்கலாமே என்று பதிவிட்டுள்ளார்.

Popular Hollywood Star Bill Duke on Director Atlee

அதற்கு பதிலளித்த அட்லீ இது நிறைவேறாத கனவு இல்லை சினிமா மீதுள்ள காதலுக்காக வெவ்வேறு நாடுகளில் உள்ளவர்கள் இணையலாம்.உங்களால் நான் அங்கீகரிக்கப்பட்டதையே மிகவும் பெருமையாக கருதுகிறேன் மிக்க நன்றி என்று பதிலளித்துள்ளார்.