2012-ல் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவான முகமூடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.ஹீரோயின் ஆவதற்கு முன் 2010-ல் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார்.தமிழின் முதல் சூப்பர்ஹீரோ படமாக முகமூடி உருவானது.பெரும் எதிர்பார்ப்புக்கிடையே உருவான முகமூடி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் பூஜாவிற்கு தமிழில் வாய்ப்புகள் குறைந்தன.

இதனையடுத்து தெலுங்கு,ஹிந்தி மொழிகளில் நடிக்கத்தொடங்கினார் பூஜா.ஹ்ரித்திக் ரோஷனின் மொஹஞ்சதாரோ படத்தில் ஹீரோயினாக நடித்த இவர் , பல ரசிகர்களை பெற்றார்.தெலுங்கில் இவர் நடித்த படங்கள் ஹிட் அடிக்க ராசியான நடிகையாக மாறினார் பூஜா ஹெக்டே.ஜூனியர் NTR,அல்லு அர்ஜுன்,மகேஷ் பாபு என்று வரிசையாக பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டார் பூஜா.

கடைசியாக இவர் ஹீரோயினாக நடித்து வெளியான திரைப்படம் Alavaikunthapuramuloo.அல்லு அர்ஜுன் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான இந்த படம்,ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது.பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த இந்த படத்தை தொடர்ந்து பூஜாவிற்கு மீண்டும் சில பட வாய்ப்புகள் வந்துள்ளன என்ற தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.பிரபாஸுடன் இவர் நடித்துள்ள ராதே ஷியாம் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

கொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவிட்டு வருகின்றனர்.இதற்கு பூஜா ஹெக்டேவும் விதிவிலக்கல்ல.தன்னால் முடிந்தளவு ரசிகர்களுடன் கலந்துரையாடி அவர்களை மகிழ்வித்து வந்தார் பூஜா.உடற்பயிற்சி மற்றும் நடனத்தில் பெரிதும் ஆர்வம் கொண்ட பூஜா அவ்வப்போது தனது நடன வீடியோக்களையும்,புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்.பூஜா ஹெக்டே யோகா செய்யும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

அல்லு அர்ஜூனுடன் இவர் நடித்த Alavaikunthapuramuloo படம் பெரிய வெற்றியை பெற்றது.அதில் பூஜாவின் கால்களை வைத்து சில சீன்கள் வரும் மேலும் புட்டபொம்மா பாடல் உலகம் முழுவதும் மிக பிரபலமான ஒன்றாக மாறியது.தற்போது இன்ஸ்டாகிராமில் 11 மில்லியன் ரசிகர்களை பெற்றுள்ள பூஜா இது குறித்து ஒரு வித்தியாசமான புகைப்படத்தை பகிர்ந்து அதற்கு விளக்கமும் கொடுத்துள்ளார்.இந்த வருடம் என் கால்களை பற்றி இருந்ததால் அதனை பயன்படுத்தி வித்தியாசமாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டார்.உங்களின் அன்பு இல்லமால் எதுவும் இல்லை தொடர்ந்து எனக்கு ஆதரவு தாருங்கள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.