பொன்ராம் இயக்கத்தில் தனக்கே உரிய கிராமத்து பாணியில் சசிகுமார் நடிக்கவிருக்கிறார். மண் வாசம் நிறைந்த கதைகளுடன் சேர்த்து காமெடியும் கலந்து ஹிட் தருவதில் வல்லவர் இயக்குனர் பொன்ராம். இவரது படைப்புகளான வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் இன்றளவும் பேசப்படும் படம். இவரது இயக்கத்தில் கடைசியாக சீமராஜா வெளியானது. 

ponram

இப்படத்தில் முக்கியமான ரோலில் நடிக்க நடிகர் ராஜ்கிரனிடம் கேட்கப்பட்டது. சில காரணங்களால் ராஜ்கிரனால் நடிக்க முடியாமல் போனது. அவரது ரோலில் நடிக்க நடிகர் சத்யராஜை தேர்வு செய்துள்ளனர். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் நடித்த சத்யராஜின் கேரக்டருக்கு நல்ல வரவேற்பு இருந்தது அனைவரும் அறிந்ததே ‌.

sasikumar

தற்போது படத்திற்கு எம்.ஜி.ஆர் மகன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என நெருங்கிய திரை வட்டாரம் மூலம் தகவல் தெரியவந்தது. விரைவில் இதுகுறித்த அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் பொன்ராம் அடுத்து விஜய்சேதுபதி வைத்து படம் எடுக்கவுள்ளார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கவுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

sasikumar