பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் செல்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.

தமிழ்நாட்டில் நீண்ட நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகப் பொங்கல் பண்டிகையாகத் திகழ்கிறது. அதன்படி போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் எனப் பெரிய பண்டிகையாகக் கிராமங்கள் தோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, வரும் 2020 ஆண்டு பொங்கல் பண்டிகை விடுமுறையானது ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கி, 19 ஆம் தேதி வரை விடுமுறை நாட்களாக இருக்கிறது. ஆனால், இடையில் 13 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் வேலை நாளாக இருக்கிறது.

railway ticket reservations

இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்குச் சென்னை மற்றும் பிற பகுதிகளில் வசிக்கும் மக்கள், தன்னுடைய சொந்த ஊருக்குச் சென்று கொண்டாடுவது வழக்கம். இதனால், அந்த நேரத்தில் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் நெரிசல் அதிகமாகக் காணப்படுவது வழக்கமாக ஒன்றாக இருக்கிறது. இதனிடையே கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் விதமாக, சென்னை உள்ளிட்ட வெளியூரிலிருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.

ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களாக நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஜனவரி 10 ஆம் தேதி ரயில் பயணம் மேற்கொள்வோர்க்கான முன் பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.

railway ticket reservations

அதேபோல், ஜனவரி 11 ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 13 ஆம் தேதி அன்றும், ஜனவரி 12 ஆம் தேதிக்கான முன்பதிவு, செப்டம்பர் 14 ஆம் தேதி அன்றும், ஜனவரி 13 ஆம் தேதிக்கான முன்பதிவு, செப்டம்பர் 15 ஆம் தேதி அன்றும், ஜனவரி 14 ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 16 ஆம் தேதி அன்றும் நடைபெறுகிறது.

இதனிடையே, பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு ரயில் டிக்கெட்டுகள், முன் பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.