சூர்யாவின் 2டி  எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். ஜே.ஜே. ப்ரட்ரிக் இயக்கும் இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இதில் பாக்கியராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன் என நட்சத்திர பட்டாளமே உண்டு. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் நடந்து முடிந்தது. 

jyothika Jyothika

படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ஈர்த்தது. இந்த படத்தில் நடிகை ஜோதிகா வக்கீலாக நடிக்கிறார். சமீபத்தில் படத்தின் முதல் சிங்கிள் வா செல்லம் லிரிக் வீடியோ வெளியானது. பிருந்தா சிவகுமார் இந்த பாடலை பாடியிருந்தார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ரூபன் எடிட்டிங் செய்கிறார். 

ponmagalvandhal PonmagalVandhal

தற்போது படத்திலிருந்து கலைகிறதே கனவே பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. உமா தேவி எழுதிய இந்த பாடல் வரிகளை கோவிந்த் வசந்தா பாடியுள்ளார்.