சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரவிருக்கும் படம் பேட்ட. 

ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கின்றனர்.

முதல் ட்ராக்கான மரணமாஸ் பாடலை தொடர்ந்து படத்தின் கேரக்டர் போஸ்டர் வெளியாகி வந்த நிலையில், பேட்ட படத்தின் இரண்டாம் பாடல் Ullaallaa வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது பேட்ட படத்தில் 10 பாடல்கள் உள்ளது என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது. அனிருத்தின் ஆல்பங்களில் அதிக பாடல் கொண்ட பெருமையும் பேட்ட படம் பெற்றுள்ளது.