தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் பேரரசு. கடந்த 2005-ஆம் ஆண்டு விஜய் வைத்து திருப்பாச்சி படத்தை இயக்கி வெற்றி கண்டார். இதையடுத்து இதே கூட்டணியில் சிவகாசி திரைப்படம் வெளியானது. இத்திரைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பின் திருப்பதி, பழனி, திருத்தனி, தர்மபுரி உள்ளிட்ட பல படங்களை பேரரசு இயக்கினார். ஊர்களின் பெயரை தலைப்பாக வைத்து படம் இயக்குவது இவரது சிறப்பாக அமைந்தது. 

Vijay

கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இதனையடுத்து தளபதி விஜய் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், ஆந்திரா,தெலுங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகியவற்றின் நிவாரண நிதிகளுக்கு தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.1.30 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

Perarasu

இந்நிலையில் பேரரசு தனது ட்விட்டர் பக்கத்தில், தளபதி விஜய் செய்த உதவி குறித்து பதிவு செய்துள்ளார். அப்பதிவில், ஒருவரை அவசரப்பட்டு குறை கூறுவதே மனிதர்களின் பெருங்குறை. தளபதி தானத்தளபதி என்று மீண்டும் நிரூபித்து விட்டார். திராவிடத்தை நேசிக்கும்தமிழனாய் தளபதி மிளிர்கிறார். தளபதி விஜய்க்கு தலைவணங்கி நன்றிகள் கோடி என பாராட்டி பதிவு செய்துள்ளார்.