வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அசுரன். இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் பட்டாஸ். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்து வருகின்றனர்.

pattas

இந்நிலையில் இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற தகவல் தெரியவந்தது. பொங்கலுக்கு தர்பார் படமும் வெளியாகவுள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.

dhanush darbar

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167-வது படமான தர்பார் படத்தை AR முருகதாஸ் இயக்கி வருகிறார். இதற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, யோகிபாபு, பிரதீக், சுனில் ஷெட்டி, ஸ்ரீமன், நிவேதா தாமஸ், யோக்ராஜ் சிங் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கவுள்ளனர்.