சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளராக இருந்து வருபவர் சித்து என்கிற VJ சித்ரா.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றிவிட்டார்.ஒரு தொகுப்பாளராக மட்டும் இல்லமால் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய நடன திறமைகளையும் நிரூபித்திருந்தார்.

இதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி,சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட முன்னணி தொடர்களிலும் நடித்துவந்தார்.தற்போது TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார்.இது தவிர ஹீரோயினாக கால்ஸ் என்ற படத்தில் கால் சென்டரில் வேலைபார்க்கும் பெண்ணாக நடித்து வருகிறார்.

கொரோனா பாதிப்பு காரணமாக ஷூட்டிங்குகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் பிரபலங்கள் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செல்வவிட்டு வருகின்றனர்.சித்ரா தனது ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பார்.சமீபத்தில் அவருடைய ரசிகையின் பிறந்தநாள் கொண்டாடி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு எப்போதும் பதிலளிப்பார்.தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் அவ்வப்போது லைவ்வில் வந்தும் ரசிகர்களை சந்தித்து வந்தார் சித்ரா.

டிக்டாக்கிலும் அவ்வப்போது தனது வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வந்தார் சித்ரா.சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராமில் பச்சை நிற புடவை அணிந்த புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவியது.இதனை தொடர்ந்து இந்த போட்டோஷூட்டின் மேக்கிங் வீடீயோவை சித்ரா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள்ளார்.இந்த வீடியோவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chithu Vj (@chithuvj) on