சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.கொரோனா காரணமாக இந்த தொடரின் பழைய எபிசொட்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.இந்த தொடரில் நடித்துள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்களுக்கும் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர்.இவர்களது புகைப்படங்கள்,விடீயோக்களை,ஸ்டோரிக்கள் என்று எது வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடும்.

கொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரத்தை சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் செலவிட்டு வருகின்றனர் இதற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினரும் விதிவிலக்கல்ல.தங்கள் பக்கத்தில் இருந்து லைவ் வருவது,ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது,அவர்கள் வைக்கும் சின்ன சின்ன கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்று தங்கள் நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.

கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.

கடந்த 8ஆம் தேதி முதல் இந்த தொடரின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இது குறித்து இந்த தொடரில் நடித்து வரும் முன்னணி நடிகர்கள் தங்கள் சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.இந்த தொடரின் புதிய எபிசோடுகள் ஜூலை 27ஆம் தேதி முதல் ஒளிபரப்பப்படும் என்று விஜய் டிவி அறிவித்துள்ளனர்.

லாக்டவுனுக்கு பிறகு இந்த தொடரின் முதல் ப்ரோமோ சில நாட்களுக்கு முன் வெளியாகி ட்ரெண்ட் அடித்து வந்தது.தற்போது இந்த தொடரில் கதிராக நடித்து அசத்தி வரும் குமரன் தற்போது ட்விட்டரில் இணைந்துள்ளார் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.முதலில் ட்விட்டரில் ஆக்டிவ் ஆக இருந்த குமரன் பின்னர் அமைதியாக இருந்துவந்தார்,தற்போது மீண்டும் ட்விட்டரில் களமிறங்கியுள்ளதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்த அறிவிப்பை இவர் வெளியிட்டுள்ளார்.ட்விட்டரில் குமரன் இணைந்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.சில மாதங்களுக்கு முன் இவருக்கு ஜோடியாக நடித்துவரும் சித்ரா ட்விட்டரில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

pandian stores kumaran aka kathir joins twitter