சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளராக இருந்து வருபவர் சித்து என்கிற VJ சித்ரா.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றிவிட்டார்.ஒரு தொகுப்பாளராக மட்டும் இல்லமால் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய நடன திறமைகளையும் நிரூபித்திருந்தார்.

இதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி,சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட முன்னணி தொடர்களிலும் நடித்துவந்தார்.தற்போது TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார்.இது தவிர ஹீரோயினாக கால்ஸ் என்ற படத்தில் கால் சென்டரில் வேலைபார்க்கும் பெண்ணாக நடித்து வருகிறார்.

கொரோனா பாதிப்பு காரணமாக ஷூட்டிங்குகள் நிறுத்தப்பட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.இந்த நேரங்களில் பிரபலங்கள் தங்கள் நேரங்களை சமூகவலைத்தளங்களில் செலவவிட்டு வருகின்றனர்.சித்ரா தனது ரசிகர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பார்.சமீபத்தில் அவருடைய ரசிகையின் பிறந்தநாள் கொண்டாடி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு எப்போதும் பதிலளிப்பார்.தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் அவ்வப்போது லைவ்வில் வந்தும் ரசிகர்களை சந்தித்து வந்தார் சித்ரா.தன்னுடைய ரசிகர்களுடன் எப்போதும் நெருக்கமாக இருப்பார் சித்ரா.

நேற்று ரசிகை ஒருவரின் பிறந்தநாளை முன்னிட்டு , அவரது வீட்டிற்கே நேரடியாக சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சித்ரா.அவரை கண்டதும் கட்டியணைத்து ஆனந்த கண்ணீர் விட்டார் சித்ராவின் ரசிகை.அவரை சாந்தமாக்கி அவர் வீட்டில் இருப்பவர்களிடம் உரையாடி பின்னர் அவர்கள் குடும்பத்தினருடன் இணைந்து அவருக்கு கேக் வெட்டி பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.இந்த வீடீயோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சித்ரா.இந்த வீடீயோவை பார்த்த பலரும் சித்ராவின் செயலை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chithu Vj (@chithuvj) on