டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஜெயபிரகாஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் வெப் தொடர் காட்மேன். கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த தொடரை பாபு யோகேஸ்வரன் இயக்கியிருக்கிறார். இவர் இதற்குமுன் ஜெயம் ரவி நடிப்பில் தாஸ் என்ற படத்தை இயக்கினார். மேலும் தற்போது விஜய் ஆண்டனி வைத்து தமிழரசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். 

Pa Ranjith Condemns Protests Against Godman Team

சமீபத்தில் இந்த வெப் சீரிஸின் டீஸர் வெளியாகி நீக்கப்பட்டது. அதில் இடம் பெற்றுள்ள ஆபாச காட்சிகளும், வசனங்களும் சமூகத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக சர்ச்சைகள் கிளம்பியது. தற்போது இதுகுறித்து இயக்குனர் பா. ரஞ்சித் தனது கருத்துக்களை ட்விட்டர் வாயிலாக பதிவு செய்துள்ளார். 

Pa Ranjith Condemns Protests Against Godman Team

அதில், காட்மேன் தொடரின் முன்னோட்டத்தை ஒட்டி, அந்த தொடரின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் மீது அவதூறுகள் பரப்பியும், அச்சுறுத்தியும், பொய்வழக்குகள் தொடுக்கும் சமூக விரோத சனாதன கும்பல்களுக்கும், துணை நிற்கும் தமிழக காவல் துறைக்கும் வண்மையான கண்டனங்கள். இந்த தொடரை தயாரிப்பதில் உறுதுணையாக இருத்துவிட்டு, பிரச்சனை வந்தவுடன் , காட்மேன் தொடரின் குழுவினரை பாதுகாக்க தவறிய ZEE5 நிறுவனத்தாரின் இச்செயல் ஏற்ப்புடையது அல்ல... மேலும் இத்தொடரை வெளியிட உரிய நடவடிக்கை மேற்கொள்க என குறிப்பிட்டுள்ளார். 

இயக்குனர் பா. ரஞ்சித் தற்போது சல்பேட்டா எனும் படத்தை இயக்கி வருகிறார். ஆர்யா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் துஷாரா விஜயன் முக்கிய ரோலில் நடிக்கிறார்.