தமிழில் அட்டக்கத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, நடிகர் கார்த்தி நடித்த மெட்ராஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் இயக்குனராக பிரபலமடைந்தவர் இயக்குனர் பா.ரஞ்சித். பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அடுத்தடுத்து கபாலி & காலா என சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தார்.

அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை.வடசென்னையில் 1980-களில் நடைபெறும் குத்துச்சண்டை கலாச்சாரத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடிகர் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். மேலும் துஷாரா விஜயன், அனுபமா குமார், சஞ்சன நடராஜன், கலையரசன், ஜான் விஜய், காளி வெங்கட் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடிகர் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

ஒளிப்பதிவாளர் முரளி.ஜி ஒளிப்பதிவு செய்துள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். நீலம் புரோடக்சன்ஸ் மற்றும் K9 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோ OTT தளத்தில் வெளியாகிறது. வருகிற ஜூலை 22-ஆம் தேதி நேரடியாக சார்பட்டா பரம்பரை திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசாகிறது.

இந்நிலையில் தற்போது வெகு நாட்களாக எதிர்பார்த்து வந்த சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும் இந்த  ட்ரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.  ஆர்யாவின் திரைப்படத்தில் முக்கிய படமாக அமைந்திருக்கும் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் அதிரடியான ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.