ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம், இன்று மீண்டும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, இரு தரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன. அப்போது, கேள்விகளுக்கு ப.சிதம்பரம், முறையாகப் பதில் அளிக்க வில்லை என்றும், அவரிடம் இன்னும் பல கேள்விகளை முன் வைத்து, விசாரணை நடத்த வேண்டும் என்றும் சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.

P Chidambaram

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ப.சிதம்பரத்தை முதலில் ஆஜர்படுத்தியபோது, அவருக்கு 5 நாட்கள் நீதிமன்ற காவல் போதும் என்று கூறியது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, இரு தரப்பு வாதங்களும் முன் வைக்கப்பட்டன.

இறுதியாக, நீதிமன்ற காவலுக்கு ப.சிதம்பரம் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி வரை அவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

P Chidambaram

இதனிடையே, கடந்த 21 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், கடந்த 9 நாட்களாக சி.பி.ஐ. காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 3 வது முறையாக அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.