ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து, ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது காவல் இன்றோடு முடிவடைந்த நிலையில், ஏற்கனவே ப. சிதம்பரம் சார்பாக ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணை வந்தது.

Chidambaram

நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ப.சிதம்பரம் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டதால், முன் ஜாமீன் வழக்கை விசாரிக்க முடியாது என்று கூறியது. மேலும், முன் ஜாமீன் மனு காலாவதியாகிவிட்டது என்று கூறி, ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Chidambaram

மேலும், ப.சிதம்பரத்தின் முதல் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அமலாக்கத்துறைக்கு எதிரான 2வது மனு மீது விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.