அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான படம் ஓ மை கடவுளே. அஸ்வத் மாரிமுத்து இந்த படத்தை இயக்கினார். ஷாரா, எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்தனர். தொலைக்காட்சி புகழ் நடிகை வாணி போஜன் இந்த படத்தில் அறிமுகமாகியிருந்தார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி இப்படத்தை தயாரித்தது. சமீபத்தில் திரைக்கு வந்த இப்படம் வெற்றி நடை போட்டது. 

Oh My Kadavule Movie To Be Remade In Hindi

இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். விது அய்யனா ஒளிப்பதிவு செய்தார். மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கடவுள் வேடத்தில் நடித்து அசத்தினார். கெஸ்ட் ரோலாக இருந்தாலும் படத்திற்கு பக்க பலமாக இருந்தது. 

Oh My Kadavule Movie To Be Remade In Hindi

தற்போது வெளியாகியிருக்கும் செய்தி என்னவென்றால், ஓ மை கடவுளே திரைப்படம் ஹிந்தியிலும் ரீமேக்காக உள்ளதாம். சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றுடன் லைவ் சென்ற இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இதை உறுதிபடுத்தியுள்ளார். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் திரை விரும்பிகள். இப்போதைக்கு அஸ்வத் இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பிஸியாக உள்ளதாக தெரிவித்தார்.