அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் நடித்துள்ள படம் ஓ மை கடவுளே. மேலும் இந்தப் படத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை வாணி போஜனும் இணைந்திருந்தார். இவர்களுடன் கௌரவ பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி இப்படத்தை தயாரிக்கிறது.

ashokselvan

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

ashokselvan sidsriram

அனிருத் பாடிய பிரண்ட்ஷிப் ஆன்தம் பாடலும், ஹய்யோ ஹய்யோ பாடலும் வெளியாகி ஈர்த்தது. வெளிநாட்டு விநியோக உரிமையை ஏ.பி.இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படத்தின் மூன்றாம் பாடல் கதைப்போமா நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. இந்த பாடலை சித்ஸ்ரீராம் பாடியுள்ளார்.