அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங் நடித்துள்ள படம் ஓ மை கடவுளே. மேலும் இந்தப் படத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை வாணி போஜனும் இணைந்திருந்தார். இவர்களுடன் கௌரவ பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி இப்படத்தை தயாரிக்கிறது.

ohmykadavule

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது. லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். விது அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டது. 

ohmykadavule

பிரண்ட்ஷிப் ஆன்தம், ஹய்யோ ஹய்யோ, கதைப்போமா இந்த மூன்று பாடல்களின் லிரிக் வீடியோ வெளியாகி ஈர்த்தது. இந்த படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை ஏ.பி.இன்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என சமீபத்தில் தகவல் தெரியவந்தது. தற்போது என்னடா லைஃப் இது பாடல் வெளியாகியது. சந்தோஷ் நாராயணன் பாடிய இந்த பாடல் வரிகளை சேஷா எழுதியுள்ளார்.