பேட்ட படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.  இன்னும் இரு தினங்களில் வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. 

rajinikanth

நயன்தாரா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார். நிவேதா தாமஸ்,யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. 

nivethathomas

2 மணி நேரம் 39 நிமிடங்கள் உள்ள இந்த திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்த நிவேதா தாமஸ் கலாட்டா குழுவிற்கு அளித்த பேட்டியில், தர்பார் திரைப்படம் உருவான விதம் குறித்தும், சூப்பர்ஸ்டாருடன் நடித்த அனுபவம் பற்றியும் பேசியுள்ளார். 

rajinikanth

அவர் பேசுகையில், ரஜினி சாருக்கு காமெடி காட்சிகள் மிகவும் பிடிக்கும். அவருடைய டைமிங் சென்ஸ் நன்றாக இருக்கும். நகைச்சுவை கலைஞர்கள் இல்லையென்றாலும், அவருடைய உடல் மொழியால் ஈர்த்து விடுவார். குறிப்பாக நான், யோகிபாபு இருக்கும் காட்சிகளில் அசத்தியிருப்பார். நகைச்சுவை காட்சிகளை இப்படி செய்யலாமா, அப்படி செய்யலாமா என்று யோசனை கேட்பார். இதனால் எந்த ஒரு பதட்டமோ, பயமோ தோன்றவில்லை. நயன்தாராவுடன் நடிக்கும் காட்சிகளை பார்க்கும் பொது பழைய ரஜினியை பார்த்தது போல் இருந்தது. டான்ஸ் காட்சிகளில் சூப்பராக ஆடினார். நான் டான்ஸ் மாஸ்டரிடம் எதற்கு நாங்கள் ? ரஜினி சாறை வைத்தே டான்ஸ் காட்சியை வடிவமையுங்கள்.