மறைந்த முதல்வரும் ,நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக்க உள்ளதாக தெரிவித்துவருகின்றனர்.அதில் ஒரு படத்தில் நித்யா மேனன் நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகின.இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

Iron Lady என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை பிரியதர்ஷினி இயக்குகிறார்.இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று இந்த படம் அடுத்த வருடம் பிப் 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.