தென்னிந்திய திரையுலகின் நம்பர் ஒன் நடிகையாக திகழ்பவர் நயன்தாரா. பல கோடி ரசிகர்களின் ஆதர்ஷ நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். நயன்தாரா படங்களில் நடிப்பதோடு சரி. பேட்டிகள் கொடுக்கவோ, பட விளம்பர நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்ளவோ மாட்டார். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்ததை தொடர்ந்து AR முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் சூப்பர்ஸ்டார் ஜோடியாக நடித்திருந்தார். 

இன்றைய காலகட்டத்தில் உச்ச நடிகர்கள் அதிகளவில் விளம்பர படங்களில் நடிப்பதில்லை. அப்படியே நடித்தாலும் கோடிகளில் சம்பளம் தந்தால் நடிக்க சம்மதிக்கின்றனர். ஆனால் இந்த கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பும் இல்லை, வருமானமும் இல்லை என்று நட்சத்திரங்களில் பலர் தங்களது பொழுதை இணைய தளத்தில் கழித்து வருகின்றனர். ஆனால் நடிகை நயன்தாரா மட்டும் அற்புதமான பணியை செய்துள்ளார். 

நயன்தாரா புதிதாகச் சலவை லிக்குவிட் விளம்பரம் ஒன்றில் அவர் நடித்திருக்கும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது வெளியான ப்ரோமோ வீடியோவை தொடர்ந்து விரைவில் இந்த விளம்பரத்தின் முழு வீடியோ வெளியாக இருக்கிறதாம். மாதக் கணக்கில் கால்ஷீட் கொடுத்து நடிக்கும் படங்களை விட நாள் கணக்கில் கால்ஷீட் கொடுத்து நடிக்கும் இதுபோன்ற விளம்பர மினி ஷூட்டிங் மீது மற்ற ஹீரோயின்களின் பார்வை திரும்பியுள்ளதாம். 

RJ பாலாஜி ஹீரோவாக நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார் நயன்தாரா. வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் மூலம் RJ பாலாஜி இயக்குனராக அறிமுகமாகிறார். இது தவிர்த்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. சிவா இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய்சேதுபதி மற்றும் சமந்தாவுடன் நடிக்கவுள்ளார். விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் நெற்றிக்கண் படமும் இவர் கைவசம் உள்ளது குறிப்படத்தக்கது.