இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் நம்ம வீட்டு பிள்ளை. சிவகார்த்திகேயனின் 16-வது படமான இந்தப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்து வருகிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

sk sk sk sk16

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் நகைச்சுவை நடிகர்களாக யோகி பாபு மற்றும் சூரி நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. நம்ம வீட்டுப் பிள்ளை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

sk sk sk sk SK sk sk

இந்நிலையில் படத்தின் முதல் பாடலான எங்க அண்ணன் பாடல் தற்போது வெளியானது. இந்தப் பாடலை விக்னேஷ் சிவன் எழுத, நாகாஷ் அஜிஸ், சுனிதி சௌஹான் ஆகியோர் பாடியுள்ளனர்.