பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் ரச்சிதா.இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார்.இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

தெலுங்கிலும் சில சீரியல்களில் முன்னணி வேடங்களில் நடித்து வந்தார் ரச்சிதா.இதனை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார் ரச்சிதா.ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தனது கணவர் தினேஷுடன் இணைந்து ரச்சிதா நாச்சியார்புரம் என்ற தொடரில் நடித்து வந்தார்.ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த தொடருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இதற்கென்று இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி இந்த தொடரை கொண்டாடி வந்தனர்.

விறுவிறுப்பாக நகர்ந்து வந்த இந்த தொடரின் ஷூட்டிங் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது.சில மாதங்களுக்கு பிறகு இந்த தொடரின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது.இந்த சீரியலின் ஷூட்டிங் முழுவதுமாக முடிவடைந்தது என்று ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம்  தெரிவித்தார்.இதனை தொடர்ந்து,ஷூட்டிங் இல்லாத காரணத்தாலும் ரச்சிதா ஊருக்குகிளம்புவதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களையும்,வீடியோக்களையும் பதிவிட்டு வந்த ரச்சிதா.தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார்.அதில் தான் ஷூட்டிங் ஸ்பாட்களில் செய்த சில சேட்டைகளை புகைப்படத்தோடு பதிவிட்ட ரச்சிதா ,இதையெல்லாம் மிகவும் மிஸ் செய்கிறேன் கூடிய சீக்கிரம் இது நார்மல் ஆகும் என்று நம்புகிறேன் என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.இந்த பதிவை கீழே உள்ள லிங்கில் காணலாம்