விஜய் டிவி தமிழ் தொலைக்காட்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு சேனல்.தங்களது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,தொடர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர்.இந்த தொலைக்காட்சியில் வேலைபார்த்த பலரும் தற்போது சினிமாவில் பிரபலன்களாக உள்ளனர்.

சிவகார்த்திகேயன்,சந்தானம் போன்ற முக்கிய நடிகர்களை உருவாக்கியது விஜய் டிவி தான்.பல துணை நடிகர்கள்,காமெடி நடிகர்கள்,இயக்குனர்கள் கதாசிரியர்கள் என்று பலரையும் அடையாளம் கண்டுள்ளது விஜய் டிவி.மேலும் கலக்கப்போவது யாரு,சூப்பர் சிங்கர் உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழகத்தில் மூலை முடுக்கில் இருக்கும் திறமைகளையும் கண்டுபிடிக்க விஜய் டிவி தவறுவதில்லை.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று Mr and Mrs சின்னத்திரை.இரண்டு சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிந்திருந்தது.இதனை தொடர்ந்து இந்த தொடரின் மூன்றாவது சீசன் சமீபத்தில் தொடங்கியது.மாகாபா ஆனந்த் மற்றும் பிக்பாஸ் புகழ் அர்ச்சனா இருவரும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர்.

கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி இந்த நிகழ்ச்சியில் நடுவராக வருகின்றனர்.வரும் வாரம் இந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி செட்டில் நடைபெறுகிறது இதன் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.இந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.