இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான வித்யாபாலன்  நடித்து வெளிவர இருக்கும்  புதிய திரைப்படம் ஷெர்னி. நியூட்டன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக பிரபலமடைந்த இயக்குனர் அமித் மசுர்க்கர் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை அபுடன்டியா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

ஷெர்னி  திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியாகிறது.முன்னதாக இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து வெளியான டீசர் ப்ரோமோ வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.மிரட்டலான வனத்துறை அதிகாரியாக ஷெர்னி திரைப்படத்தில் வித்யாபாலன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பெண் வனத்துறை அதிகாரியாக வித்யாபாலன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷெர்னி திரைப்படத்தின்  ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.வித்யாபாலனின்  ஷெர்னி திரைப்படம்  இந்த வருடம் ஜூன் மாதம் வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வனத்துறை அதிகாரி உடையில் அடர் வனப்பகுதியில் வித்யாபாலன் தோன்றும் ஷெர்னி திரைப்படத்தின் ட்ரைலரில் படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகியுள்ளது.

அமேசான் ப்ரைம் OTT தளத்தில்  ஷெர்னி திரைப்படம் (ஜூன் 18) இந்த மாதம் 18 ஆம் தேதி வெளியாகும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் வித்யாபாலனின் புதிய திரைப்படமான ஷெர்னி திரைப்படம் 18ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தற்போது வெளியாகி உள்ள இந்த டிரைலரும் எதிர்பார்ப்புகளை எகிற வைத்திருக்கிறது.