இந்திய சினிமாவில் ஈடு இணையற்ற ஜாம்பவானாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ரசிகர்களை தனது ஸ்டைலான நடிப்பால் மகிழ்வித்து வருகிறார். அடுத்தடுத்து லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அந்த வகையில் முதலாவதாக தனது மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் ஸசலாம் திரைப்படத்தில் முக்கியமான சிறப்பு கௌரவத் தோற்றத்தில் நடிக்கிறார். முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜெயிலர் திரைப்படத்தில் படையப்பா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் நடிகை ரம்யா கிருஷ்ணன் முன்னணி கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்க, பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் அதிரடியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள நடிகர் விநாயகன் உட்பட பலர் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்திற்கு ராக் ஸ்டார் இசை அமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

முன்னதாக ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து செய்திகள் பரவி வந்த நிலையில், தற்போது இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் ஜெயிலர் படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் மோகன்லால் இருக்கும் மாஸான புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளனர். அட்டகாசமான இந்த பதிவு இதோ…
 

Lalettan @mohanlal from the sets of #Jailer 🤩@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial pic.twitter.com/wifqNLPyKf

— Sun Pictures (@sunpictures) January 8, 2023