அகில உலக சூப்பர்ஸ்டார் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் சுமோ. பிப்ரவரி 14, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட படங்களை இயக்கிய ஹோசிமின் இப்படத்தை இயக்குகிறார். ப்ரியா ஆனந்த் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சுமோக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

shiva

யோகி பாபு, வி.டி.வி கணேஷ் ஆகியோருடன் சுமோ வீரர் Yoshinori Tashiro-ம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் முக்கிய காட்சிகளை ஜப்பானில் படமாக்கியுள்ளது படக்குழு. ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். பிரவீன் கே.எல் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

sumo

சுமோ விளையாட்டு சீனா மற்றும் ஜப்பானில் மிகவும் பிரபலம் என்பதால், இந்தப் படத்தை சீனா மற்றும் ஜப்பானில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. தற்போது இப்படம் 2020 பொங்கலுக்கு வெளிவராது என்ற தகவல் கலாட்டா செவிகளுக்கு எட்டியது. இதனால் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாயினர் சிவா ரசிகர்கள். வரும் 2020 பொங்கலுக்கு தர்பார் மற்றும் பட்டாஸ் இந்த இரண்டு படங்கள் மட்டும் வெளியாகிறது.