சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் !
By Aravind Selvam | Galatta | August 12, 2019 15:39 PM IST
சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் !
Share
தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது இவர் இன்று நேற்று நாளை இயக்குனர் ராம்குமாருடன் SK 14,இரும்புத்திரை இயக்குனர் PS மித்ரனுடன் ஹீரோ மற்றும் இயக்குனர் பாண்டிராஜுடன் SK 16 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.அணு இம்மானுவேல் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
யோகிபாபு,சூரி,நடராஜன்,RK சுரேஷ்,பாரதிராஜா,சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.நம்ம வீட்டு பிள்ளை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் Firstlook காலை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிக்பாஸ் 3 புகழ் மீரா மிதுன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த அறிவிப்பை மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
உங்கள் வாழ்த்துக்களுடன் #நம்மவீட்டுப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் உங்களை மிக விரைவில் நான் சந்திக்க உள்ளேன் 😍😍😍#NammaVeettuPillai @Siva_Kartikeyan @Pandiraj_dir @Immancomposer @aishu_dil @offBharathiraja @thondankani @sooriofficial @natty_nataraj @studio9_suresh pic.twitter.com/ftF2rvu4pL
— Meera Mitun (@meera_mitun) August 12, 2019