தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

இந்த படத்தை  Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.டிக்டாக்,யூடியூப் என்று பல தளங்களில் பல சாதனைகளை இந்த படத்தின் பாடல்கள் நிகழ்த்தி வருகிறது.கொரோனா முடிந்து திரையரங்குகள் திறந்த பின் மாஸ்டர் படத்தை கொண்டாட ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.தற்போது மாஸ்டர் படப்பிடிப்பு தலத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வந்தது.விஜய்,மாளவிகா மோஹனன்,இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ இருந்த இந்த புகைப்படத்தில் விஜய்க்கு யார் கேக் ஊட்டி விடுவது என்று ரசிகர்கள் தேடி வந்தனர்.இந்நிலையில் அந்த போட்டோவில் விஜய்க்கு கேக் ஊட்டி விடுவது நான்தான் என்று படத்தின் உதவி இயக்குனரும்,படலாசிரியருமான விஷ்ணு எடவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.