தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

இந்த படத்தை  Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.டிக்டாக்,யூடியூப் என்று பல தளங்களில் பல சாதனைகளை இந்த படத்தின் பாடல்கள் நிகழ்த்தி வருகிறது.இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சூப்பர்ஹிட் பாடல்களில் ஒன்று குட்டி ஸ்டோரி.

அனிருத் இசையில் அருண்ராஜா காமராஜா வரிகளில் தயாராகியுள்ள இந்த பாடலை விஜய் பாடியுள்ளார்.விஜயின் பேச்சுக்களை வைத்து இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த பாடல் 1.7 மில்லியன் லைக்குகளுடன் யூடியூபில் சாதனை படைத்தது.அத்துடன் இந்த லிரிக் வீடியோ பாடல் ஒரு லட்சம் கம்மெண்ட்களை பெற்று ,இந்த பெருமையை பெரும் முதல் லிரிக் வீடியோ என்ற சாதனையை படைத்துள்ளது.தற்போது இந்த பாடலின் லிரிக் வீடியோ தற்போது 75 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.இதனை விஜய் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.