தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாகவும், ரசிகர்களின் உடன்பிறவா அண்ணனாகவும் திகழ்பவர் தளபதி விஜய். குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் ஹீரோவாக இருந்து வருகிறார். தளபதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அட்வான்ஸ் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர் பிரபல தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ.

Master Co Producer Special Vijay Birthday Poster

XB பிலிம்ஸுடன் இணைந்து செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தான் மாஸ்டர் படத்தை தயாரித்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் உள்ளனர். ராக்ஸ்டார் அனிருத்தின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பி வருகிறது. 

Master Co Producer Special Vijay Birthday Poster

கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. விரைவில் இந்நிலையை கடந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி, தளபதியை பெரிய திரையில் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள். கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று தளபதி விஜய் கூறினாலும், ரசிகர்கள் கேட்பார்களா....