'தமிழ் சினிமா' பல்வேறு கலை திறமைகளை கண்டெடுத்த காவிய தாய். இப்படிப்பட்ட கலையுலகில் சிறு வயதிலிருந்து சீராக உழைக்கும் தாகம் தீரா கலைஞன் STR எனப்படும் சிம்பு. 35 வருடம் ரசிகர்களை தன்வசம் வைத்திருக்கும் திரை வல்லவன். 

str

STR-ஐ ரோலர் கோஸ்டர் என்றே கூறலாம். சிறு வயதிலே பல்வேறு ஏற்ற இறக்கங்களை பார்த்தவர். பணம், பதவி போன்ற விஷயங்கள் இவரை விட்டு சென்றாலும், ஒரு ரசிகனைக்க்கூட இழக்காத பெருமைக்கு உரியவர். தவழும் வயதில் தானாக உழைத்தவர், ரசிகர்களின் அன்பால் சுயம்பு போல் முளைத்தவர் STR.

trstr

தற்போது சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் T ராஜேந்தர் தயாரிக்கவிருக்கும் மகாமாநாடு படத்தில் இயக்கி நடிக்கவுள்ளார் STR. 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. இந்த சுவையூட்டும் செய்தியை நம் கலாட்டா குழுவுடன் தொலைபேசி வாயிலாக பகிர்ந்து கொண்டார் பன்முகத்திறன் கொண்ட மனிதர் T ராஜேந்தர். இறைவனின் ஆசியோடும் ரசிகனின் அன்போடும் இப்படம் இனிதே துவங்க கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.