நவரசத்தின் ஒன்பது உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒன்பது எபிசோடுகளில் உருவாகியிருக்கும் நவரச ஆன்தாலஜி வெப் சீரிஸில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும்  கிட்டார் கம்பி மேலே நின்று, அரவிந்த் சுவாமி இயக்கத்தில் நடிகை ரித்திகா, ரமேஷ் திலக், பசங்க ஸ்ரீராம் நடிக்கும் ரௌத்திரம் எனும் எபிசோடு உருவாகியுள்ளது. 

நடிகர் அதர்வா, அஞ்சலி, கிஷோர் இணைந்து நடித்திருக்கும் துணிந்த பின்,இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் யோகிபாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு நடிக்கும் சம்மர் ஆஃப் 92 (SUMMER OF 92), இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், பாபி சிம்ஹா, சமந்தா ஆகியோர் நடிக்கும் பீஸ் எபிசோடை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். 

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த் சுவாமி, பிரசன்னா நடிக்கும் ப்ராஜெக்ட் அக்னி , இயக்குனர் வசந்த் சாய் இயக்கத்தில் நடிகைகள் அதிதி பாலன், ரோகினி மற்றும் நடிகர் டெல்லி கணேஷ் நடித்திருக்கும் பாயாசம் தயாராகியுள்ளது.நடிகர் சித்தார்த், நடிகை பார்வதி இணைந்து நடிக்கும் இன்மை எபிசோடை இயக்குனர் ராஜேந்திர பிரசாத் இயக்கியுள்ளார்.

இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாக்ஷனின் க்யூப் சினிமா டெக்னாலஜிஸ் இணைந்து தயாரித்துள்ள ஆன்தாலஜி வெப்சீரிஸ் நவரசா நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் நேரடியாக வருகிற ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நவரசா வெப்சீரிஸின் அனைத்து பாடல்களும் அடங்கிய ஜுக்பாக்ஸ் வெளியானது. இந்த ஜுக்பாக்ஸ் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.