மஹரிஷி படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிக்கும் அடுத்த படத்தை Fun and Frustration படத்தை இயக்கிய Anil Ravipudi இயக்குகிறார்.இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்,மகேஷ்பாபுவின் GMB என்டேர்டைன்மெண்ட்ஸ் மற்றும் AK என்டேர்டைன்மெண்ட்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.ஜெகபதி பாபு மற்றும் விஜயசாந்தி முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர்.இந்த படத்திற்கு Sarileru Neekevvaru என்று பெயரிட்டுள்ளனர்.

விஜயசாந்தி13 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கிறார்.இந்த படத்திற்கான ஷூட்டிங்கில் தற்போது இவர் இணைந்துள்ளார்.இது குறித்து படத்தின் இயக்குனர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.இந்த படம் பொங்கல் 2020 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.